லெட் என்ற ஈயம்
Lead paint
பெயிண்ட் சிறப்பானதாக மற்றும் விலை குறைவானதாக இருக்க பெரிதும் பயன்படுவது ஈயம்.
ஆனால் இது ஒரு அபாயகரமான பொருள்.
குழந்தைகள் உபயோகிக்கும் விளையாட்டு பொருளில் இந்த பெயிண்ட் (பெரும்பாலும்
சீன தயாரிப்பில் அதிகம்) பயன்படுகிறது.
அது குறிப்பாக ஆறு வயதுக்கு குறைந்த குழந்தைகளுடைய வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும்
இதனால் மூளை பாதிக்கப்பட்டு மன வளர்ச்சி பாதிப்பு எற்படும்.
குழந்தைகளின் வளர்ச்சியை (Growth) தடுக்கும். முன்னேற்றத்தை தாமதிக்கும்.
இது சிறுநீரகத்தை பாதிக்கும்.
மேலும் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும்.
பெரியவர்களின் ஆண்மை தன்மையை பாதித்து மலடாக்கும்
இது குழந்தைகள் வாயில் படும் பொழுது சிறது இனிப்பு சுவை இருப்பதால்
அக்குழந்தைகள் அதை கடிக்க மற்றம் சுவைப்பதால் நச்சுத்தன்மை கொண்ட பொருள் உள்ளே செல்ல வாய்ப்பு எற்படுகிறது.
1977 லேயே அமெரிக்கா இதை தடை செய்து (16 Code of Federal Regulations CFR 1303)
சட்டம் இயற்றி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள (CPSC instituted the Consumer Product Safety Improvement Act of 2008 ) இந்த சட்டத்தின் படி பெயிண்டில் உள்ள ஈயத்தின் அளவு 0.06% (w/w) to 0.009%, or 90ppm, தான் இருக்க வேண்டும் என உறுதி செய்துள்ளனர்.
மேலும் விபரம் அறிய இந்த வலைதளத்தில் பார்க்கலாம்
http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml77/77096.html
நமது நாட்டில் ஈயத்தின் அளவு நாம் நிணைத்திராத அளவு ஆயிரத்துக்கு மேல்
அதற்கு வரைமுறையே இல்லை என்பதே உண்மை.
இது பற்றிய ஒரு விளிப்புணர்வு தேவை.
இதை ஊடகங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
ஆங்கிலத்தில் இதை lead என்று அழைப்பார்கள்
இது பெயிண்டில் விரைவாக காய்வதற்காகவும்
நீடித்து உழைப்பதற்காகவும்
சிறப்பான தோற்றத்திற்காகவும்
resist moisture க்காகவும் இதை
பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.
இந்த lead இல்லாத(குறைவான) பெயிண்ட் கடைகளில் கிடைக்கிறது.
அதை கேட்டு மக்கள் வாங்க ஊக்கப்படுத்த வேண்டும்.
இது மிகவும் அவசியம்.
வீடு கட்டும் அனைவரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தைகள் உபயோகிக்கும் விளையாட்டு பொருளில்
இதை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்றால்
இதன் விலை மலிவு என்பதால் தான்
இதை கீழ்கண்ட வலைமனையில் தெரிந்து கொள்ளலாம்
http://www.nytimes.com/2007/09/11/business/worldbusiness/11lead.html
In tamil brahmin communities, usually Rasam is made in ஈய சொம்பு. Is that also injurious?
ReplyDeletehttp://lh5.ggpht.com/_BEoPV3dRdqg/TDgUfL-0F2I/AAAAAAAAJBg/DjYwktGdndk/IMG_0164%5B2%5D.jpg