Tuesday, September 28, 2010

வேலிக் கருவை (சீமைக் கருவை) நமது வேலைக்கு உதவாது.

தமிழ்நாடு முழுவதும் நீக்கமற நிறைந்து காணப்படுவது இந்த வேலிக்கருவை தான்.


கிராம மக்கள் விறகாக பயன்படுத்துகிறார்கள்.


அதைத் தவிர அவர்களுக்கு இதனால் எந்த பயனும் கிடையாது.


இது ஒரு ஆட்கொல்லி மரம்.


இதன் விதைகள் மற்றும் இலைகள் இவற்றால் எந்தவித பயனும் கி்டையாது.


இதனால் சுற்றுப்புறம் பாதிக்கப்படும்.


இந்த மரத்தில் பறவைகள் கூடு கட்டுவது கிடையாது.


இதன் அருகில் படுத்து உறங்கும் விலங்கினங்கள் மலடாகும்.


நிலத்தடி நீர் குறைந்து போகும்.


அதைவிட ஒரு படி மேல் போய் அந்த நீரை விஷமாக மாற்றும்.


கரிய  அமில  வாயுவை  அதிக அளவு வெளிவிடுகிறது.


மேலும் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகிறது.


புவி வெப்பமாக மாறுவதற்கு இதுவும் ஒரு காரணம்..


வெயில் காலங்களில் நிலத்தடி தண்ணீரை அதிக அளவு உறிஞ்சி விடுவதால் 


நிலத்தடி தண்ணீர் மிகவும் குறைந்து 

கிணறு மற்றும் குளங்களில் விரைவில் தண்ணீர் வற்றி விடுகிறது.

மேலை நாடுகளில் இது விஷச் செடியாகவே அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

சோதனைக் கூடங்களில் செய்த  ஆய்வுகளில் இது நீருபிக்கப்பட்டுள்ளது.

கீழ் கண்ட வலைதலத்தி்ல் வேலிக்கருவை பற்றிய பல தகவல்கள் உள்ளன.



Saturday, September 11, 2010

ஸ்ரீ கணபதி கோவில்




ஸ்ரீ கணபதி கோவில்

1979 விம்பிள்டன் நகரிலும் அதன் அருகிலும் வாழந்து வந்தனர் இலங்கையைச்  சேர்ந்த சில இந்து சைவக் குடும்பத்தினர்.

அவ்வப்போது அவர்கள் ஒன்று சேர்ந்து அங்குள்ள ஒரு கட்டிடத்திலே கூடி விநாயகரை வழிபடத் தொடங்கினர்.

அவர்களிடம் ஒரு சிறிய கணபதி சிலை இருந்தது.

தங்கள் தாய் மண்ணிலே தாங்கள் இனிமையாக கொண்டாடி மகிழ்ந்த மத விழாக்களின் இனிய தருணங்களை மீண்டும் பெற அவர்கள் விரும்பினர்.

விநாயகரிடம் பிரார்த்தித்தனர்.

பிரார்த்தனை வீணாகவில்லை.

விநாயகருக்கு பூஜை செய்ய ஒரு குருக்கள் கிடைத்தார்.

வெள்ளிக்கிழமை தோறும் ஒன்று கூடி பூஜைகள் செய்து ஆன்மிக அனுபவங்களைப் பெற்றனர்.

நாட்கள் செல்ல செல்ல அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வர ஆரம்பித்தனர்.

நிலையான வசதிகள் நிறைந்த ஒரு கட்டிடம் இந்துக்கள் வழிபாட்டிற்கு தேவை என்றாயிற்று.



"இறைவா எங்களுக்கு உமது அருள் பெற ஒரு கோவிலை தா"


என மீண்டும் பிரார்தித்தனர் இங்கிலாந்து வாழ் இந்துக்கள்.

விநாயகர் மீண்டும் அருள் பாலித்தார் தம் இந்து பக்தர்களுக்காக.

1980 ல் அங்கிருந்த ஒரு குடும்பத்தினர் விம்பிள்டனில் தாம் வாங்கிய ஒரு கட்டிடத்தை தம் இந்து சமுதாய வழிபாட்டிற்கு என அர்ப்பணித்தனர்.

இப்படி உருவானதே இந்த ஸ்ரீ கணபதி விநாயகர் கோவில்

பயன்பாட்டில் இல்லாத இடிந்த கிறித்துவ வழிபாட்டு நிலையமாக (ஆங்கிலிக்கன் சர்ச்) இருந்த அக்கட்டிடம் உள்கட்டமைப்பிலே ஒரு இந்துக் கோவிலாக ஒரே வருடத்தில் மாற்றம் பெற்றது.

1981 செப்டம்பர் மாதத்திலே மகா கும்பாபிஷேகம் நடைபெற்று ஐரோப்பாவிலேயே கும்பாபிஷேகம் செய்து புனிதப்படுத்தப்பட்ட முதல் இந்துக் கோவிலாக உருப்பெற்றது.

கோவிலை ஒட்டி இருந்த சர்ச் ஹால் சாய் மந்திராக உருமாற்றம் பெற்றது.

இதன் மூலம் இந்து சமயத்தின் பழமையும் புதுமையும் ஒன்றாக இணைந்த இக்கோவில் கடந்த 19 ஆண்டுகளாக மேன்மேலும் வளர்ந்து வந்துள்ளது.

ஆரம்பத்திலே இக்கோவில் சந்தித்த எதிர்ப்புகள் பயங்கரமானவை.

உள்ளுர் சமுதாயத்திடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இந்துக்கள் சிலரிடமிருந்தும் எதிர்ப்பு வந்ததுதான் மிக்க வேதனை தந்த விஷயம்.

மகாகும்பாபிஷேகம் நடந்த அதே நாளிலே முழுமையாக இடிப்பதற்க்கான

உத்தரவிணையும் பெற்றது இக்கோவில்.

ஹைகோர்ட்டிற்கும் அதனையும் தாண்டியும் வழக்கு சென்றது.

இறுதியில் விநாயகர் தம் பக்கர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து தம் பக்தர்களின் கோயிலையும் நம்பிக்கையையும் காத்தார்.

இறுதியாக இங்கிலாந்து வாழ் இந்துக்கள் சட்டபூர்வமாகவும் வெற்றி பெற்றனர்.

இக் கோவிலில் பூஜைகளை எவ்வித தடையுமின்றி தொடர அனுமதியும் பெற்றனர்.

தொடர்ந்த பல ஆண்டுகளில் அங்கே வாழ்ந்த பல சமுதாயத்தினரிடையே இணக்கத்தை உருவாக்கும் முயற்சிகள் முதலில் எடுக்கப்பட்டன.

அவர்களின் குழந்தைகளின் உதவியுடன் இது சாத்தியப்பட்டது.

ஆண்டு தோறும் 3000 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் இங்கு வந்து இந்து சமயத்தையும் நமது பழக்க வழக்கங்கள் பாரம்பரியங்கள் பற்றியும் தொpந்து கொள்கிறார்கள்.


இதன் மூலம் ஹிந்து மக்கள் பற்றியும் ஹிந்து மத நம்பிக்கைகள் பற்றியும் அவர்கள் கொண்டருந்த பயம் மற்றும் அவ நம்பிக்கைகள் மாற்றம் பெற்றன.

குழந்தைகள் வழியாக பெற்றோரும் இவற்றை உணர்ந்து சிறிது சிறிதாக நம் சமயத்தினரை ஏற்றுக் கொண்டார்கள்.

இப்பணியிலே சாய்மந்திரும் தன்னுடைய மதிப்பு மிக்க சேவையின் மூலம் இக்கோவில் வளர துணை நின்றது.

அவர்களுடைய முயற்சியினால் இக்கோவில் அதன் விரிவான சேவைக்காகவும் பலதரப்பட்ட நம்பிக்கை நிறைந்த வேலைகளுக்காகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோவில் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்ற 1981 ம் ஆண்டு முதல் நாள்தோறும் கூடி வரும் தன்னுடைய பக்தர்களின் எண்ணிக்கைக்கேற்ப தன்னை மாற்றியும் வளர்த்தும் வந்துள்ளது.

இந்து மத பிரார்த்தனைகளுடன் தொடங்கப்பட்ட இக்கோவில் தினந்தோறும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை தொடரும் பூஜைகளுடன் வளர்ச்சி பெற்று வருகிறது.

தற்போது 4 குருக்கள் உள்ளனர்.

அதிலே ஒருவர் சைவ குருக்கள் . இவர் இந்துக்களின் இறுதி மற்றம் பிற சடங்குகளையும் செய்வார்.

இங்கு வரும் பக்தர்களிலே மிக அதிகமானவர்கள் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளின்  பெற்றோர்கள்.

தங்களின் குழந்தைகள் எங்கே இந்த மேனாட்டு சமுதாயத்தில் தொலைந்து காணாமல் போய் விடுவார்களோ என்ற பயம் கொண்டவர்கள்.

எனவே இக்கோவிலை சோந்த இந்துக்கள் நம் இந்து மதம் சார்ந்த கல்வி மற்றும் இசை வகுப்புகளை தொடங்கினார்கள்

ஆசிரியர்களுக்கு இலவசமாகவும் மாணவர்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்துடன் இவ்வகுப்புகள் நடத்தப்பட்டன.

சில வருடங்களில் இவர்களில் பலர் நடனம் இசை மற்றும் வாத்திய இசையிலே மிகச் சிறந்த தேர்ச்சி பெற்றனர்.

இவர்களின் முதல் வருட மாணவியர்களில் ஒருவர் நடன ஆசிரியராக இக்கோவிலில் பொறுப்பேற்று நடத்தி வருவது இக்கோவில் இந்து நிர்வாகிகளுக்கு அளவிலாத மகிழ்ச்சியைத் தந்தது.

இந்துக்களின் நாகரிகமும்  நம்பிக்கைகளும் தொடரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்படும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கிடைத்தது.

இக்கோவிலின் பிரதான கடவுள் விக்ரகம் விநாயகர்.

இந்து வழக்கப்படி ஒவ்வொரு செயலும் விநாயகரிடம்  இருந்தே தொடங்குகிறது.

மனித உடலிலே பொருத்தப்பட்ட யாணைத் தலையுடன் அவர் படைப்பு தத்தவத்தை விளக்குகிறார்.

ஓவ்வொரு படைப்பும் ஒலியில் இருந்தே தொடங்குகிறது.

விநாயகர் ஓம் அல்லது பிரணவம் என்ற முதல் ஒலியாக மந்திரங்களின் பிறப்பிடமாக விளங்குகிறார்.

சக்தி சிவனுடன் சேறும் இடத்திலே விநாயகரும் முருகரும் பிறக்கின்றனர்.

அதாவது சக்கி பொருளைச் சேருமிடத்தே ஒலியும் ஒளியும் பிறக்கின்றன. இதுவே இந்து மதத்தின் அறிவியல் தத்துவம்.

இந்து நம்பிக்கையின் படி கணபதி சிவன் மற்றும் பார்வதியின் முதல் மைந்தன்.
விநாயகரை வணங்குவதன் மூலம் ஒரு ஹிந்து இவ்வுலகிலே தான் நிறைவேற்ற இருக்கின்ற மிகச் சிறந்த காரியங்களுக்கான இறைசக்தியை பெறுகின்றான்.

மனிதப்பிறவியின் நோக்கம் இவ்வுலக வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து மதவாழ்விலும் வெற்றி பெறுவது.

எனவே இந்துக்கள் தங்களுடைய செயல்களை தொடங்குவதற்கு முன் விநாயகரை வணங்குகின்றனர்.

இந்து சமய விழாக்களிலும் இந்து சமயம் சார்ந்த செயல்களிலும் விநாயகரை முதலில் வணங்குவதற்கு இதுவே காரணம்.

Tuesday, June 22, 2010

இந்திய வரலாறு எனது பார்வையில் பாகம் 1

இன்று நாம் காணும் இந்திய பெண்கள் இடும் திலகம் முதல் மெட்டி வரை நாம் வணங்கும் இயற்கை தெய்வங்கள் மற்றும் இன்றைய கோவில் தெப்பத் திருவிழாக்கள் எல்லாம் நாம் சுமந்து வரும் கலாச்சார தொடர்ச்சிகளே

நம்மை மற்றவர் எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும் நாம் அனைவரும் நம்மை அறியாமல் ஒரே கலாச்சாரத்தைத்தான் பின்பற்றுகிறோம்

நமது கலாச்சாரத்தை அறியாமல் சிலர் மனிதர்களை கடவுளாக பின்பற்றுவதால் (கருதுவதால்) சில தவறுகள் நடக்கின்றன.

நமது முன்னோர்கள் மிகச்சிறந்த மகான்களை அவர்களது வாழ்க்கையை உபதேசங்களை தமக்கு பாடமாக மட்டுமே எடுத்துக் கொண்டு தனது மற்றும் நமது வாழ்க்கையை சிறக்க செய்தார்கள்.

அவர்களை கடவுளாக கருதவில்லை அவர்களது நல்ல நடவடிக்கையயை மட்டுமே அவர்கள் பின்பற்றினார்கள்

நம் மன்னில் தோன்றிய சித்தர்கள் மேற்கத்திய நாட்டில் பிறந்து இருந்தால் அவர்களை கடவுளாக ஒரு பிரிவினர் இன்று வழிபட்டு சமய பிரச்சாரம் செய்ய ஜெப கூட்டம் கூட்ட இந்தியா வந்து இருப்பார்கள்.

தொடரும்