Wednesday, January 12, 2011

சிவபுரத்து நடராஜரின் வெளிநாட்டு பயணம் பாகம் - 2


சென்ற பாகத்தில் நடராஜர் சிலை சீர்படுத்த ஒரு ஸ்தபதியிடம் கொடுத்த தாக சொல்லி இருந்தேன் அந்த ஸ்தபதி அதே போல் இன்னோரு நடராஜர் சிலையை வடித்து சிலை சீர்படுத்தியாகிவிட்டது என்று கூறி போலி நடராஜரை சிவபுரம் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்து விட்டார்.

இது நடந்தது யாருக்கம் தெரியாது.

நடராஜர் எவ்வாறு கைமாறினார் என்பதை கீழே காணலாம்


ஸ்தபதி ரூ. 7,000 க்கு தஞ்சாவுரை சேர்ந்த 3 பேரிடம் விற்க

தஞ்சை 3வர் ரூ. 15,000 க்கு பம்பாயில் இருந்த பிரிட்டி பத்திரிக்கையாளரிடம் விற்க

பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் அதை ரூ. 25,000 க்கு கலைபொருள் விற்பணையாளரிடம் விற்க

விற்பணையாளர் அதை ரூ. 3,00,000 க்கு பென் கெல்லர் என்ற வெளி நாட்டவருக்கு விற்க

பென் ஹெல்லர் அதை ரூ. ஒரு கோடிக்கு ($900,000) நாட்டன் சைமன் என்ற பவுண்டேசனுக்கு விற்றார்.

இப்படியாக சிவபுர நடராஜர் வெளிநாடு சென்றார்.

டக்லஸ் பாரட் தனது ஆராய்சிக்கட்டுரையில் இதை வெளிவிடும் வரை இந்த செய்தி யாருக்கும் வெளியில் தெரியவில்லை.

திடுக்கிட்டனர். தொல்பொருள் இலாகாவினர்.

தாமதமாக விளித்துக் கொண்ட தமிழ்நாடு அரசு S.கிருஷ்ணராஜ் என்ற (Deputy Inspector General, CID) அதிகாரியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது.

இந்த அதிகாரியின் புலனாய்வின் படி நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் பதிவானது.

ஸ்காட்லாந்து போலிஸ் உதவியுடன் சிலை மீட்க உதவி கோரப்பட்டது.

இங்கிலாந்தை சேர்ந்த அண்ணா பொளல்டன் என்பவரிடம் சிலை இருந்தது.

இந்திய அரசு அமெரிக்க நாட்டன் சைமன் பௌண்டேசன் (Norton Simon Foundation) மேல் வழக்கு தொடுத்தது.

அமெரிக்க அரசின் உதவியை இந்திய வெளியுறவுத் துறை மூலம் தொடர்பு கொண்டு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு சைமனிடன் ஒப்பந்தம் செய்து

சிலை 1987 ல் இந்திய தொல் பொருள் துறையின் டைரக்டர் ஜெனரல் திரு.M.S. நாக ராஜ ராவ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தற்பொழுது சிவபுர நடராஜர் சென்னை மயிலாப்புர் கபாலிசுரர் ஆலயத்தில் அமர்ந்துள்ளார்.

விரைவில் நமக்கு தரிசனம் தர அவர் தான் மனது வைக்க வேண்டும்.

சிவபுரத்து நடராஜரின் வெளிநாட்டு பயணம் பாகம் 1


1951 ல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிவபுரத்தில் அன்னமுத்து படையாட்சி என்ற விவசாயியின் நிலத்தைத் தோண்ட தொழிலாளர்கள் ஒரு வெண்கல நடராஜர் சிலையை கண்டேடுத்தனர்.

புதையல் சட்டப்படி அது அரசு வசமாயிற்று.

அப்போதைய கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் சிவபுரம் கோயிலைச் சேர்ந்தது என்று தெரியவந்தஉடன் கோவில் நிர்வாகம் கேட்க

1953 ல் மாவட்ட கலெக்டர் அதை சிவகுருநாத சுவாமி கோவிலிடம் ஒப்படைத்தார்.

நடரஜர் சிலையில் சிலபகுதி நசுங்கி இருந்ததால் சீர்படுத்த ராமசாமி என்ற ஒரு ஸ்தபதியிடம் கொடுத்தனர்.

அவரும் அதை சீர்படுத்தி கோவில் நிர்வாகத்திடம் கொடுக்க அவர்களும் அதை பெற்று கோவிலில் முறைபடி வைத்து வழிபட வசதி செய்து கொடுத்தனர்.

சில ஆண்டுகள் கழிந்தது.

டக்லஸ் பாரட் என்ற பிரிட்டிஷ் மியுசியத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிவபுரம் வந்தார். நமது நடராஜரை பார்த்தார் அவர் அதை போலி என கண்டார். (அவர் வந்த ஆண்டு 1957) இங்கிலாந்து சென்ற உடன் தனது புத்தகத்தில் (South Indian Bronze) கோவிலில் இருப்பது போலி.

உண்மையான நடராஜர் இருப்பது அமெரிக்க கலைபொருள் சேகரிக்கும் நபரிடம் உள்ளது என திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

சிவபுரம் நடராஜர் எப்படி அமெரிக்கா சென்றார்.

அது தனிகதை பாகம் இரண்டில் காண்க.





Saturday, January 8, 2011

இணையத்தில் உள்ள வீடியோவை எந்த சாப்ட்வேரும் இல்லாமல் இணையத்தில் இருந்தே பதிவு இறக்கம் செய்ய







இணையத்தில் உள்ள வீடியோவை எந்த சாப்ட்வேரும் இல்லாமல் இணையத்தில் இருந்தே பதிவு இறக்கம் செய்ய


எனக்கு computer பற்றிய அறிவு மிக மிக குறைவு.

இருந்தாலும் என் போன்ற Computer Knowledge அதிகம்

தெரியாதவர்களுக்காக இப்பதிவு.

இணையத்தில் உள்ள வீடியோவை நாம் download செய்ய இந்த

முறை மிக எளிது.

கீழே உள்ள தலத்திற்க்கு முதலில் செல்லுங்கள்


http://keepvid.com/?url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DvwnNp1dbL2g%26feature%௩ரெலதெட்


அதில் URl என்று ஒரு கட்டம் இருக்கும் அதில்

நீங்கள் தரவிரக்கம் செய்ய நிணைக்கும் வீடியோ

தலத்தின் Url ஐ காப்பி செய்து போடவேண்டும்

பின்னர் அதன் அருகில் உள்ள Download என்ற

பட்டனை தட்டினால் போதும்

இப்பொழுது கிழே அதே பக்கத்தில்


›› Download FLV ‹‹ - Low Quality - 400×226
›› Download FLV ‹‹ - Medium Quality - 640×360
›› Download MP4 ‹‹ - High Quality - 480x360

டவுன் லோடு ஆகி காட்டும் அதில் தாங்கள் மூன்றாவதை தேர்வு செய்தால்

(எது வேண்டுமோ அது) உடனடியாக தாங்கள் தரவிரக்கம் ஆக வேண்டிய

இடத்தை (நமது computer ல்) கேட்கும் நாம் தேர்வு செய்த

உடன் download எளிதாக முடிந்து விடும்

you tube ல் உள்ள வீடியோவை இதில் மிக விரைவாக தரவிரக்கம் செய்யலாம்.

you tube download software இலலாமல் தரவிரக்கம் செய்யமுடியும்.

இதனால் நமக்கு நமது computer ல் இடம் மிச்சமாகும்.

லெட் என்ற ஈயம் Lead paint


லெட் என்ற ஈயம்

Lead paint


பெயிண்ட் சிறப்பானதாக மற்றும் விலை குறைவானதாக இருக்க பெரிதும் பயன்படுவது ஈயம்.

ஆனால் இது ஒரு அபாயகரமான பொருள்.

குழந்தைகள் உபயோகிக்கும் விளையாட்டு பொருளில் இந்த பெயிண்ட் (பெரும்பாலும்

சீன தயாரிப்பில் அதிகம்) பயன்படுகிறது.

அது குறிப்பாக ஆறு வயதுக்கு குறைந்த குழந்தைகளுடைய வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது நரம்பு மண்டலத்தை பாதிக்கும்

இதனால் மூளை பாதிக்கப்பட்டு மன வளர்ச்சி பாதிப்பு எற்படும்.

குழந்தைகளின் வளர்ச்சியை (Growth) தடுக்கும். முன்னேற்றத்தை தாமதிக்கும்.

இது சிறுநீரகத்தை பாதிக்கும்.

மேலும் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும்.

பெரியவர்களின் ஆண்மை தன்மையை பாதித்து மலடாக்கும்

இது குழந்தைகள் வாயில் படும் பொழுது சிறது இனிப்பு சுவை இருப்பதால்

அக்குழந்தைகள் அதை கடிக்க மற்றம் சுவைப்பதால் நச்சுத்தன்மை கொண்ட பொருள் உள்ளே செல்ல வாய்ப்பு எற்படுகிறது.

1977 லேயே அமெரிக்கா இதை தடை செய்து (16 Code of Federal Regulations CFR 1303)

சட்டம் இயற்றி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள (CPSC instituted the Consumer Product Safety Improvement Act of 2008 ) இந்த சட்டத்தின் படி பெயிண்டில் உள்ள ஈயத்தின் அளவு 0.06% (w/w) to 0.009%, or 90ppm, தான் இருக்க வேண்டும் என உறுதி செய்துள்ளனர்.

மேலும் விபரம் அறிய இந்த வலைதளத்தில் பார்க்கலாம்

http://www.cpsc.gov/cpscpub/prerel/prhtml77/77096.html

நமது நாட்டில் ஈயத்தின் அளவு நாம் நிணைத்திராத அளவு ஆயிரத்துக்கு மேல்

அதற்கு வரைமுறையே இல்லை என்பதே உண்மை.

இது பற்றிய ஒரு விளிப்புணர்வு தேவை.

இதை ஊடகங்கள் கண்டிப்பாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

ஆங்கிலத்தில் இதை lead என்று அழைப்பார்கள்

இது பெயிண்டில் விரைவாக காய்வதற்காகவும்

நீடித்து உழைப்பதற்காகவும்

சிறப்பான தோற்றத்திற்காகவும்

resist moisture க்காகவும் இதை

பெயிண்ட் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.

இந்த lead இல்லாத(குறைவான) பெயிண்ட் கடைகளில் கிடைக்கிறது.

அதை கேட்டு மக்கள் வாங்க ஊக்கப்படுத்த வேண்டும்.

இது மிகவும் அவசியம்.

வீடு கட்டும் அனைவரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் உபயோகிக்கும் விளையாட்டு பொருளில்

இதை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்றால்

இதன் விலை மலிவு என்பதால் தான்

இதை கீழ்கண்ட வலைமனையில் தெரிந்து கொள்ளலாம்

http://www.nytimes.com/2007/09/11/business/worldbusiness/11lead.html