1951 ல் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிவபுரத்தில் அன்னமுத்து படையாட்சி என்ற விவசாயியின் நிலத்தைத் தோண்ட தொழிலாளர்கள் ஒரு வெண்கல நடராஜர் சிலையை கண்டேடுத்தனர்.
புதையல் சட்டப்படி அது அரசு வசமாயிற்று.
அப்போதைய கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் சிவபுரம் கோயிலைச் சேர்ந்தது என்று தெரியவந்தஉடன் கோவில் நிர்வாகம் கேட்க
1953 ல் மாவட்ட கலெக்டர் அதை சிவகுருநாத சுவாமி கோவிலிடம் ஒப்படைத்தார்.
நடரஜர் சிலையில் சிலபகுதி நசுங்கி இருந்ததால் சீர்படுத்த ராமசாமி என்ற ஒரு ஸ்தபதியிடம் கொடுத்தனர்.
அவரும் அதை சீர்படுத்தி கோவில் நிர்வாகத்திடம் கொடுக்க அவர்களும் அதை பெற்று கோவிலில் முறைபடி வைத்து வழிபட வசதி செய்து கொடுத்தனர்.
சில ஆண்டுகள் கழிந்தது.
டக்லஸ் பாரட் என்ற பிரிட்டிஷ் மியுசியத்தை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிவபுரம் வந்தார். நமது நடராஜரை பார்த்தார் அவர் அதை போலி என கண்டார். (அவர் வந்த ஆண்டு 1957) இங்கிலாந்து சென்ற உடன் தனது புத்தகத்தில் (South Indian Bronze) கோவிலில் இருப்பது போலி.
உண்மையான நடராஜர் இருப்பது அமெரிக்க கலைபொருள் சேகரிக்கும் நபரிடம் உள்ளது என திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
சிவபுரம் நடராஜர் எப்படி அமெரிக்கா சென்றார்.
அது தனிகதை பாகம் இரண்டில் காண்க.
history is interesting :)
ReplyDeleteநல்ல பகிர்வு காத்திருக்கிறேன்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.
அடுத்த பாகம் எங்கே ????
ReplyDeleteஆகா ஆகா = இரண்டில் பார்ப்போம்
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலையுலகில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்..
வாழ்த்துககளுடன்...
ReplyDeleteவலைப்பூக்களில்
சாதனை படையுங்கள்