Thursday, September 27, 2012

உடல் எடையைக் குறைக்க


உடல் எடையைக் குறைக்க 


உடற்பயிற்சி,
உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

ஈசா யோகா அல்லது ரவிசங்கர்ஜீயின் சுதர்சண கிரியா செய்யலாம் மிகவும் எளிமையானது. 30 நிமிடங்கள் போதும்.

ஈசா யோகாவின் பழைய 13 நாட்கள் பயிற்சி மிகவும் நல்லது

ஆனால் தற்போது அந்த பயிற்சி அங்கு அளிக்ப்படுவதில்லை

அதற்க பதிலாக இப்பொழுது ஏழு நாட்கள் சாம்பவி மகாமுத்ரா பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதற்க்கு அடுத்த பயிற்சியான        சுன்யா (Soonya) பயிற்சியில் பழைய 13 நாள் பயிற்சி வகுப்பு பாடம் இடம் பெறுகிறது

அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது.

எதை சாப்பிடலாம்?

தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும்.

கீரை வகைகள், பீன்ஸ் அவரை, புடலங்காய், பூசணி காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.


சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். 
ஆனால், மாம்பழம் பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைத்து கொள்ளவேண்டும்.

பப்பாளிக் காய், முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.

எந்த சூ‌ப் சாப்பிடலாம்?

வாழைத்தண்டு சூ‌ப் செய்முறை

வாழைத்தண்டைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜுஸ் பிழிந்து ​ வடிகட்டிக் கொள்ளவும்.

பார்லியை இளம் சிவப்பாக வறுத்துப் பொடியாக்கவும்.
அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
வாழைத் தண்டு சாறில் பார்லி மாவைக் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின் இறக்கி வைத்து மிளகுப் பொடி உப்பு,​ எலுமிச்சம்பழச்சாறு மற்றும் பால் சேர்த்து சூடாக அருந்தவும்.


அறுகம்புல் சூ‌ப் செய்யும் முறை

இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும்

மேலும் பூசணி    மற்றும் தடியங்காய் சூ‌ப் சாப்பிடலாம்.

 இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்

இவற்றுடன் நான் மேலே சொன்ன ஈசா யோகா செய்ய 30 நிமிடங்கள் தான் 
தேவை . 

இவற்றை செய்தால் மனநலத்துடனும் உடல்நலத்துடனும் 
தொப்பை தொல்லையின்றி வாழலாம்.

பூசணிக்காய்



பூசணிக்காய்

இதைச் சமைத்துச் சாப்பிட்டால்

நரம்பைப் பற்றிய நோய்கள்,

நரம்புத் தளர்ச்சி,

வயிற்றுப்புண்

மேகவெட்டை,

பிரமேக நோய்

ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.

உடல் சூட்டைத் தணிக்கும்.

சிறுநீர் வியாதிகளை நீங்கும்.

உடல்வலி தீரும்.

புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன.

நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.

ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

இதய பலவீனம் உள்ளவர்களுக்கு
வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.


நெஞ்சுசளி குறைய
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும்.

நீரழிவு நோயை கட்டுப்படுத்த
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிடவேண்டும்.

ரத்தச் கசிவை நிறுத்த
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிடவேண்டும்.

வலிப்பு நோய் தீவிரம் குறைய
பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிடவேண்டும்.

சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் நீங்க ரத்தம்,சீழ் கலந்த சிறுநீர்
வெளியேறாமல் தடுக்க

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிடவேண்டும்.

மஞ்சள்காமாலை நோய் குணமாக
பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிடவேண்டும்.

தேக புஷ்டி உண்டாக,உடல்சுட்டை தணிக்க,பித்த நோயை குணப்படுத்த
பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிடவேண்டும்.

வெண்பூசணி லேகியம்
நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக் கொள்ளவும்.

வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும்.

பயன்கள்
சுவாச உறுப்புக்கள் பலப்படும்
இருதய பலவீனம் நீங்கி பலப்படும்
நல்ல பசியுண்டாகும்.
மலச்சிக்கல் இருக்காது.
பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும்.
ஈசனோபைல் நிவர்த்தியாகும்.
டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது.


குறிப்பு
பூசணி லேகியம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்




Tuesday, May 15, 2012

நாகர்கோவில் ஈசா வகுப்பு

நாகர்கோவிலிக்கு சத்குரு வருகிறார் .

ஈசா வகுப்பில் சத்குருவிடம் நேரடியாக பயிற்சி பெற விருப்புவோர் கிழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

விபரங்களுக்கு


Sadhguruvudan Isha Yoga

in Tamil 
Date:
29 Jun - 1 Jul 2012
Location:
Desiha Vinayagar Nagar,
velladichivilai - kannankulam
Nagercoil, India
Details:
Program E-    flyer
This program is conducted by Sadhguru.
For questions or offline registration details:
Contact 1:
Phone:
83000 66000

Email:
Contact 2:
Phone:
83000 67000







ஈசா அன்பர்களுக்கு மட்டும்

மற்றவர்கள் கண்டிப்பாக முறையாககற்றுக்கொண்டு (ஈசா பயிற்சி வகுப்பில்)

அதன் பின் பயிற்சி செய்யவேண்டும்

இதனை தொடர்ந்து செய்ய முடியாதகாரணத்தால் அதனை மறந்துபோனதாகவும்,ஞாபகப்படுத்தும்படியும் எனது நண்பர்கள்ஈசா பயிற்சி பெற்ற நண்பர்கள்) கேட்டுக்கொண்டனர்


அவர்களுக்காகவே இது தொகுக்கப்பட்டுள்ளது



யோகா பயிற்சிக்கு முன் அல்லது உணவுக்க முன்

அ.... ம்... அ......ம்..அ.....ம்... ( ஓம்... ஓம்...ஓம்...) 
ஸஹனா வவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினாவதீதமஸ்து
மாவித் விஷா வஹை ஹி
ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி


தமிழில் இதன்பொருள்


கூடியிருப்போம். கூடியிருந்துண்போம்
கூடியிருந்து ஆற்றலைப் பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.
நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும்.
ஓம் சாந்தி... சாந்தி...சாந்தி



யோகப் பயிற்சிக்கு பின்




அ.... ம்... அ......ம்..அ.....ம்... (ஓம்... ஓம்... ஓம்.)..

அஸத்தோமா ஸத்கமய

தமஸோமா ஜ்யோதிர்கமய

ம்ருத்யோர்மா அம்ருதங்கமய

ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி


தமிழில் இதன்பொருள்



எம்மைப் பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் (அறியாமையிலிருந்து மெய்மைக்கும் தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து நிலைப்பேற்றிற்கும் இட்டுச் செல்வாயாக.


சாம்பவி மகா முத்ரா


சாம்பவி மகா முத்ரா பயிற்சியின் முறைகள்

1.பதங்காசனா

பட்டாம்பூச்சி மாதிரி காலை மடக்கி வைத்துக்கொண்டு மேலே கீழே 2 நிமிடங்கள் செய்ய வேண்டும்

2. சிசுபாலாசனா

வலது காலை இடது கை நடுவில் வைத்துக்கொண்டு குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும்(2 நிமிடம்)
அதேபோன்று இடது காலை வலது கை நடுவில் தாங்கிக்கொண்டு, குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும், இதுவும் 2 நிமிடம்

3. நாடி விபாசனா

இதனை மூன்றுமுறை செய்துமுடிக்கவேண்டும். பூனை போன்று முதுகை நன்றாக வானவில்லை போல செய்யவேண்டும், பின்னர் முதுகுதண்டை கீழாக இறக்கவேண்டும் , மூச்சை தலை உள்வாங்கும்போது வெளியேற்றவேண்டும், தலையை மேல்நோக்கும்போது மூச்சை உள் வாங்கவேண்டும். குனிந்துகொண்டே வலது காலை நெற்றிதொட செய்து வெளிநீட்டவேண்டும், இதையே இடதுகாலிலும் தொடரவும்


4. சுகக்கிரியா


அர்த்தாசனத்தில் உட்கார்ந்து 7 நிமிடங்கள்
இதனை செய்யவேண்டும்


5. ஓம்

21 முறை “அ” “உ” “ம்” அதாவது ஓம் என்று கூறவேண்டும்




6. விபரீத சுவாசம்


தலையை சற்றே உயர தூக்கி மூச்சை இடது நாசி வழியாக உள்ளே இழுத்து வலது நாசிவழியாக வெளியே விடவேண்டும் .
மூன்று நிமிடங்கள் செய்து முடித்த பின் இடது நாசி வழியாக மூச்சை வெளியே விட்டு முடிக்க வேண்டும்.

7. பூட்டு (ஓஜஸ்)


மூச்சை நன்றாக உள்ளிழுத்து தலையை பின்னோக்கி சாய்த்து கழுத்தை உள்ளிழுத்து பின்னர் தலைகவிழ்த்து பூட்ட வேண்டும், வயிற்று பகுதியை இறுக்கவேண்டும், மலவாயை சுருக்கவேண்டும், இப்படியே ஆனந்தமாக எவ்வளவு நேரமிருக்கமுடியுமோ இருக்கவேண்டும்.


பின்னர் கழுத்தை நேர்வைத்து மூச்சை வெளியிடவேண்டும், கழுத்தை பின்னோக்கி சாய்த்து, உள்ளிழுத்து மறுபடியும் பூட்ட வேண்டும், இந்த நிலையில் எவ்வளவு நேரம் சுகமாக இருக்கமுடியுமோ இருக்கலாம். பின்னர் கழுத்தை நேராக்கி மூச்சை உள்ளிழுத்து , வயிற்றையும், மலவாயையும் தளர்வாக விடவும்

8. ஆனந்தமாக மூச்சை கவனிக்கவும்


மேல் கூறியவற்றை முடித்தபின் மூச்சை நன்றாக கவனிக்கவும் , ஓரே சீராக இருக்கும்!, இரண்டு , மூன்று நிமிடங்கள் இந்நிலையில் இருந்தவுடன் கைகளால் வணங்கி முகத்தை துடைத்துக்கொண்டு , மெதுவாக கண்களை திறக்கவும்(முதலில் தரையை பார்த்து பின்னர் பார்வையை மேல்நோக்கி கண்களை திறக்கவேண்டும்).

பின் குறிப்பு


இக்குறிப்பு முறையாக ஈசா பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே

இதை வைத்து பயிற்சியை செய்யவேண்டாம்.

உங்கள் உடல் நலத்தை பாதுகாக்க விரும்பினால்

நீங்கள் உங்கள் ஊரிலேயே இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

 http://ishafoundation.org ல் நிகழ்ச்சி தேதிகளை தெரிந்துகொள்ளுங்கள். 

ரூ.900 மட்டுமே நன்கொடையாக அளித்து நீங்கள் இந்த “சாம்பவி மகா முத்ரா” வை கற்றுக்கொள்ளலாம்

உங்கள் ஊரில் நடைபெறவில்லை என்றால் வருகின்ற ஜீன் மாதம்
நீங்கள் சத்குருவின் நாகர்கோவில் (29 ஜீன் முதல் 1 ஜுலை வரை)
அல்லது
பாண்டிச் சேரி (22 - 24 Jun 2012) பயிற்சி வகுப்பல் கலந்து கொள்ளலாம்

விபரங்களுக்கு

நாகர் கோவில் வகுப்பு பற்றிய விவரங்களுக்கு

Sadhguruvudan Isha Yoga

in Tamil 
Date:
29 Jun - 1 Jul 2012
Location:
Desiha Vinayagar Nagar,
velladichivilai - kannankulam
Nagercoil, India
Details:
Program E-    flyer
This program is conducted by Sadhguru.
For questions or offline registration details:
Contact 1:
Phone:
83000 66000

Email:
Contact 2:
Phone:
83000 67000























பாண்டிச்சேரி வகுப்பு பற்றிய விவரங்களுக்கு

Sadhguruvudan Isha Yoga

in Tamil 
Date:
22 - 24 Jun 2012
Location:
Tagore Art College ground,
Pondicherry, India
Details:
Program E-    flyer
This program is conducted by Sadhguru.
For questions or offline registration details:
Contact 1:
Phone:
83000 16000

Email:
Contact 2:
Phone:
94878 95876





Sunday, May 6, 2012

isha yoga

last Year  I participate isha yoga class
It is very interesting and also touch my soul.

Saturday, July 16, 2011

கறுப்பு பணம் பதுக்கியோர் தேசத் துரோகிகள்: பாய்கிறார் ஜக்கி வாசுதேவ்



ஓங்கி உயர்ந்த மலைக் குன்றுகள். அதை, எட்டிப் பிடிக்க முயலும் பாக்கு மரங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் முடிவில் துவங்குகிறது ஈஷா யோக மையம். தொலை தூரத்தில் கேட்கும் உளியின் ஓசையில், ஆளுயர பாறைகள், அதனதன் உருவம் பெறுகின்றன. மொத்தத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே சந்திக்கிறார். நேரம் கடப்பது தெரியாதபடி பேசுகிறார். இனி அவர்:

அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், பெஜாவர் பீடாதிபதி வரிசையில், நீங்கள் எப்போது உண்ணாவிரதம் இருக்கப் போகிறீர்கள்?ஒரு கோரிக்கையை வன்முறை கொண்டும் நிறைவேற்றலாம்; உண்ணாவிரதம் இருந்தும் நிறைவேற்றலாம். இரண்டும் இல்லாமல், எதையும் சாதிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. இங்கு, ஊழல், கற்பனையே பண்ண முடியாத உயரத்தை எட்டிவிட்டது. நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி ஊழல்கள் நடக்கின்றன. இதனால் தான் நம் முன்னேற்றம் தடைபட்டிருக்கிறது.

தலைவர்கள் சரியாக இருந்தால், தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத்தும், பீகாரும் முன்னுதாரணங்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மாதிரி இருக்கிறது. குஜராத்தும், பீகாரும் மட்டும் வேறு தேசம் போலிருக்கிறது.நல்லவர்கள் முதல்வர்களாகவோ, பிரதமர்களாகவோ இருந்தால், கடைசி வரை அவர்கள் தான் அந்தப் பதவியில் இருப்பர். ஆனால், யாருமே அப் படி செய்யவில்லையே.கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைப்பவர்களை, தேசத் துரோகிகள் என்றழைக்காமல், வேறெப்படி சொல்வது? ஒரு பக்கம் மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடும்போது, இவர்கள் கறுப்புப் பணத்தில் திளைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?இந்த கொடுமைகளை எல்லாம் தடுப்பதற்கு, மக்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். நாட்டு நடப்புகளில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதற்கு, லோக்பால் வரவேண்டும். ஊழல், இங்கு கலாசாரமாகவே ஆகிவிட்டது. யாருக்கும் அதுபற்றிய குற்ற உணர்ச்சி இல்லை. இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, சமூக ஆர்வலர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஒரு கருவியாக இருக்கின்றன.இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மாதிரியே நடந்து கொள்வதில்லையே! ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலல்லவா நடந்து கொள்கின்றனர். அதனால் தானே இத்தகைய போராட்டங்களுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. செய்ய வேண்டிய வேலையை அரசு செய்யாததால் தானே, தங்கள் வேலையை விட்டுவிட்டு, மக்கள், வீதிக்கு வரவேண்டியுள்ளது.அதற்காக, சாமியார்கள் அரசியல் செய்யலாமா?

ஏன்? அவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம் இல்லையா? அவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும் தானே! அவர்கள் பின்னால், லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களுக்கு எது நல்லதோ, அதை அவர்கள் செய்கின்றனர். அரசியலில் தலையிடுவதா, வேண்டாமா என்பதெல்லாம், அவரவர் விருப்பம் இல்லையா?அன்னா ஹசாரே விளம்பரப் பிரியராக இருக்கிறாரோ...போராட்டத்துக்கு முன்பு வரை, அவர் காந்தியவாதியாகத் தெரிந்தார். வழிக்கு வரவில்லை என்றதும், இப்படி பட்டம் கட்டிவிட்டனர். ஹசாரேவுக்கு மாற்றாக பாபா ராம்தேவைப் பயன்படுத்த நினைத்தனர். முடியவில்லை என்றதும், அவர் பெயரையும் கெடுக்க முயற்சிக்கின்றனர்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லும் விதம் சரியில்லாவிட்டால் தான் என்ன? அவர் சொன்ன விஷயம் சரியா என்று பார்க்க வேண்டியது தானே.ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை, பாபா ராம்தேவ் மழுங்கடித்துவிட்டாரா? நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தடுமாறிவிட்டார் என்று சொல்வேன். அவர் இப்பிரச்னையைச் சரியாகக் கையாண்டிருந்தால், இன்னும் நாலு பேர் சேர்ந்திருப்பர். மிகப் பெரிய போராட்டமாக வலுப்பெற்றிருக்கும்.

அது இருக்கட்டும். படுத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது ஓர் அரசால் எப்படி தடியடி நடத்த முடிந்தது? அதுவும் தலைநகரில்! நாலாபுறமும் தடுப்புச் சுவர் கொண்ட மைதானத்தில், பெண்கள் என்றும் பாராமல் தாக்கினரே. ஜனங்களை அடிக்கும் அரசு எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்! பழிவாங்கும் செயலுக்காக போலீசையும், வருமான வரித் துறையையும் பயன்படுத்த ஆரம்பித்தால் நாடு எப்படி உருப்படும்?ஆனால், தன் அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, அவரே சொல்லியிருக்கிறார்.

என்ன தப்பு? அந்த அறக்கட்டளை, மக்களால் நடத்தப்படுவது. அவர் ஓர் அடையாளம் மட்டுமே. அதை அவர், தன் பெயரிலேயே நடத்தியிருந்தால், யார் தடுத்திருக்க முடியும்? அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தாலென்ன? அவர் எளிமையாகத் தானே இருந்தார்? தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லையே! அந்தச் சொத்துக்களுக்கு தணிக்கை நடந்து, கணக்கு காட்டியிருக்கிறாரே.அவரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். நன்கொடை வழங்குகின்றனர். நல்லது செய்யப்போய்த் தானே அவரைத் தேடிச் செல்கின்றனர்! நேற்று வரை நல்லவராகத் தெரிந்தவர், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததும் கெட்டவராகி விட்டாரா?சாய் பாபாவின் படுக்கை அறையிலிருந்து, 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது...அவரது உயரத்துக்கு, 12 கோடி ரூபாயெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த அறையில் எவ்வளவு இருந்தது என்று, அவருக்கே தெரிந்திருக்காது.

பக்தர்கள் கொடுத்ததை, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார். அந்தப் பணத்தைப் பதுக்கி, அவர் என்ன செய்யப்போகிறார்? அவரைத் தேடி கோடிகள் கொட்டப்பட்டபோது, எதற்கு இந்தச் சிறிய தொகையை லட்சியம் செய்யப்போகிறார்! அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் உண்மை!பத்மநாபசுவாமி கோவிலில் கிடைத்த பல கோடி நகைகளை என்ன செய்யலாம்? அங்கு மட்டுமா இருந்தது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இருந்தது. முஸ்லிம் மன்னர்களும், வெள்ளைக்காரர்களும் அதைக் கொள்ளையடிக்கத் தானே இங்கு வந்தனர்! அப்போது கொள்ளையடித்த பணத்தில் தான், ஐரோப்பிய பொருளாதாரம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் கொள்ளையடித்தது போக, மீதமிருந்த கோவில்களின் நகை எல்லாம் எங்கே? அதைக் கேட்காமல், இதை என்ன செய்வது எனக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அரசாங்கம் கட்டட்டும். சுதந்திரம் கொடுத்தால், தனியார்கள் கட்டுவர். கோவில் சொத்தில் ஏன் கட்ட வேண்டும்? சுரண்டுவதை நிறுத்தினாலே அரசாங்கத்துக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும்.

எந்த நாட்டிலும் இப்படி ஒரு அநீதி கிடையாது. ஒரு மதத்தினர் மட்டும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப வழிபாட்டுத் தலம் கூட நடத்த முடியாது. அரசு எடுத்துக்கொள்ளும் என்று பயம். கோவிலை ஆன்மிகவாதிகள் நடத்த வேண்டுமா? அரசு கிளார்க்குகள் நடத்த வேண்டுமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இப்படிச் செய்ய முடியுமா? தேசம் எரிந்துவிடும் என்பதால் தானே இந்து மதத்தில் மட்டும் பண்ணுகிறீர்கள்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது...மாநிலம், தொழில் துறையில் நல்ல வளர்ச்சி பெற்று வந்தது. ஆனால், ஊழல் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அரசு மாறிவிட்டது.புதிய அரசு, பல்வேறு விஷயங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது. தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் பணியாற்ற என்னுடைய அன்பும் ஆசிகளும்!

ஆர்.ரங்கராஜ் பாண்டே

நன்றி : தினமலா் நாளிதழ்

ahh; Fuy; nfhLj;jhYk; mtuJ Fyk; Nfhj;jpuk; ghHf;fhky; mtiu Mjhpg;;Nghk;

ed;wp [f;fp thRNjt; mtHfNs.

md;Gld;

tuhfd;.



Saturday, February 5, 2011

இந்திய கருப்புப் பணம் அயல் நாட்டில் 15 நபர்கள் பட்டியல்


இந்திய கருப்புப் பணம் அயல்நாட்டில் பதுக்கியவர்கள் பட்டியலை தெகல்கா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

2009ல் ஜெர்மனி அரசு, LGT bank of Liechtenstein (190 km from Munich, Germany.)

என்ற வங்கியிடம் இருந்து தாம் பெற்ற பட்டியலை

(மார்சு 18 2009ல்) நமது நாட்டிம் அதிகாரபுர்வமாக கொடுத்தது.

மன்மோகன் சிங் அரசு அதை வெளிவிடாமல் இரண்டு ஆண்டுகள் பாதுகாத்து வந்தது.

அந்த பட்டியலை தெகல்கா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.



2010 பிப்ரவரி 6 ல் தெகல்கா பத்திரிக்கை அதை வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் பலமுறை கேட்டும் அதை வெளியிட மறுத்து வந்தது மன்மோகன் அரசு.

அவர் நல்லவர் தான் ஆனால் அவரை ஆட்டுவிக்கும்

இத்தாலிய அரசின் முடிவால் அவரால் வெளியிடமுடியவில்லை.

ஜெர்மனி அரசு தான் பெற்ற 1600 லிஸ்டில் இருந்து இந்தியர்கள் என்று நம்பப்படுவர்கள் என்று

தான் கருதிய 18பேர் பட்டியலை கொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும்

இந்திய அரசு உச்சநீதிமன்றம் கேள்வி கேட்க ஆரம்பிக்கும்

வரை அவர்களை பாதுகாக்கவே தனது பொன்னான நேரத்தை செலவிட்டது.

அதில் உள்ளவர்கள் என்று நம்பப்படும் 15 பேர் கொண்ட பட்டியலை முதலாவதாக தெகல்கா பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இதோ அந்த பட்டியல்

1. Manoj Dhupelia

2. Rupal Dhupelia

3. Mohan Dhupelia

4. Hasmukh Gandhi

5. Chintan Gandhi

6. Dilip Mehta

7. Arun Mehta

8. Arun Kochar

9. Gunwanti Mehta

10. Rajnikant Mehta

11. Prabodh Mehta

12. Ashok Jaipuria

13. Raj Foundation (registered outside India.)

14. Urvashi Foundation(registered outside India.)

15. Ambrunova Trust (registered outside India.)

இந்த பட்டியல் LGT bank of Liechtenstein (190 km from Munich, Germany.)என்ற ஒரு வங்கியில் உள்ள பணம் முதலீடு செய்தவர்கள் மட்டுமே.

ஜெர்மனி தனது நாட்டவரான 600 பேரின் பேரில் நடவடிக்கை எடுத்து கிட்டதட்ட முடிவடைந்து விட்டது.

நமது நாட்டில் எப்பொழுது விசாரணையை ஆரம்பிப்பது?

அதற்குள் காலம் கடந்து விடும்.

மேலும் விபரங்களுக்கு

http://www.tehelka.com/story_main48.asp?filename=Ne120211TheList.asp






Tuesday, February 1, 2011

பதிவர்களே தமிழ் திரட்டிகள் 25 இதோ உங்களுக்காக



உங்கள் பதிவுகளை பிரபலம் அடையச் செய்ய

கிழ் கண்ட திரட்டிகளில் உங்கள் படைப்புகளை பதிந்து சாதணைபடைக்க வாழ்த்துகிறேன்.

நம் மீனவர்கள் வாழ்வில் ஒளிவீச சிங்களத்தீவினிர்க்கோர் புது பாலம் அமைப்போம்.

சீன படையின் புதுத் தெம்பில் வலம் வரும் இலங்கை படைவீரர்களிடம் அகப்படும் நம் சகோதரர்களுக்கு (நம் மீனவர்களுக்கு) குரல் கொடுங்கள்.

படைப்புகளில் உங்கள் குரல் ஒலிக்கட்டும்.

மறக்காமல் உங்கள் கருத்துக்களோடு வாக்களியுங்கள்.


http://ww2.aranijothish.com/



http://www.etamil.net/

http://yaaldevi.com/
http://www.namkural.com/
http://www.newspaanai.com/

http://www.valaipookkal.com/
http://ta.tamilers.com/
http://tamilpoint.blogspot.com/
http://tamilulagam.0fees.net/submit/



http://www.bogy.in/
http://iniyatamil.striveblue.com/bookmarks/



http://www.valaiyakam.com/

http://www.thiratti.com/

http://thalaivan.com/blog/

http://www.tamilveli.com/v2.0/index.html
http://www.tamildaily.com/
http://tamil.blogkut.com/
http://tamilblogs.corank.com/tech/submit/

http://www.ellameytamil.com/submit/
http://thatstamil.oneindia.in/bookmarks/submit


http://ulavu.com/

http://wiki.pkp.in/



http://tamilmanam.net/


http://ta.indli.com/
http://www.tamil10.com/

சொல்ல முடியாத

வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத

துயரங்களை அனுபவிக்கும்

இந்திய மீனவர்களுக்கு இந்த பதிவு சமர்பணம்.