Thursday, September 27, 2012

உடல் எடையைக் குறைக்க


உடல் எடையைக் குறைக்க 


உடற்பயிற்சி,
உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

ஈசா யோகா அல்லது ரவிசங்கர்ஜீயின் சுதர்சண கிரியா செய்யலாம் மிகவும் எளிமையானது. 30 நிமிடங்கள் போதும்.

ஈசா யோகாவின் பழைய 13 நாட்கள் பயிற்சி மிகவும் நல்லது

ஆனால் தற்போது அந்த பயிற்சி அங்கு அளிக்ப்படுவதில்லை

அதற்க பதிலாக இப்பொழுது ஏழு நாட்கள் சாம்பவி மகாமுத்ரா பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதற்க்கு அடுத்த பயிற்சியான        சுன்யா (Soonya) பயிற்சியில் பழைய 13 நாள் பயிற்சி வகுப்பு பாடம் இடம் பெறுகிறது

அளவான உடற்பயிற்சி உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, ஆயுள்காலத்தையும் அதிகரிக்கிறது.

எதை சாப்பிடலாம்?

தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும்.

கீரை வகைகள், பீன்ஸ் அவரை, புடலங்காய், பூசணி காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.


சீசனல் பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். 
ஆனால், மாம்பழம் பலாப்பழம், கிழங்கு வகைகள் போன்றவற்றை குறைத்து கொள்ளவேண்டும்.

பப்பாளிக் காய், முள்ளங்கியை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளவும்.

எந்த சூ‌ப் சாப்பிடலாம்?

வாழைத்தண்டு சூ‌ப் செய்முறை

வாழைத்தண்டைத் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து ஜுஸ் பிழிந்து ​ வடிகட்டிக் கொள்ளவும்.

பார்லியை இளம் சிவப்பாக வறுத்துப் பொடியாக்கவும்.
அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைக்கவும்.
வாழைத் தண்டு சாறில் பார்லி மாவைக் கலந்து கொதிக்கும் தண்ணீரில் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பின் இறக்கி வைத்து மிளகுப் பொடி உப்பு,​ எலுமிச்சம்பழச்சாறு மற்றும் பால் சேர்த்து சூடாக அருந்தவும்.


அறுகம்புல் சூ‌ப் செய்யும் முறை

இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்
சித்த வைத்தியத்தில் மிகவும் சிறப்பாகக் கூறப்படும் ஒரு தாவரம் அருகம்புல்லாகும்.
இதன் ஆங்கில பெயர் Cynodon doctylon ஆகும்

மேலும் பூசணி    மற்றும் தடியங்காய் சூ‌ப் சாப்பிடலாம்.

 இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட, 40 நாட்களில் தொப்பை குறையும்

இவற்றுடன் நான் மேலே சொன்ன ஈசா யோகா செய்ய 30 நிமிடங்கள் தான் 
தேவை . 

இவற்றை செய்தால் மனநலத்துடனும் உடல்நலத்துடனும் 
தொப்பை தொல்லையின்றி வாழலாம்.

No comments:

Post a Comment