ஈசா அன்பர்களுக்கு மட்டும்
மற்றவர்கள் கண்டிப்பாக முறையாககற்றுக்கொண்டு (ஈசா பயிற்சி வகுப்பில்)
அதன் பின் பயிற்சி செய்யவேண்டும்
இதனை தொடர்ந்து செய்ய முடியாதகாரணத்தால் அதனை மறந்துபோனதாகவும்,ஞாபகப்படுத்தும்படியும் எனது நண்பர்கள்ஈசா பயிற்சி பெற்ற நண்பர்கள்) கேட்டுக்கொண்டனர்
அவர்களுக்காகவே இது தொகுக்கப்பட்டுள்ளது
யோகா பயிற்சிக்கு முன் அல்லது உணவுக்க முன்
அ.... ம்... அ......ம்..அ.....ம்... ( ஓம்... ஓம்...ஓம்...)
ஸஹனா வவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினாவதீதமஸ்து
மாவித் விஷா வஹை ஹி
ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி
தமிழில் இதன்பொருள்
கூடியிருப்போம். கூடியிருந்துண்போம்
கூடியிருந்து ஆற்றலைப் பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.
நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும்.
ஓம் சாந்தி... சாந்தி...சாந்தி
யோகப் பயிற்சிக்கு பின்
அ.... ம்... அ......ம்..அ.....ம்... (ஓம்... ஓம்... ஓம்.)..
அஸத்தோமா ஸத்கமய
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய
ஓம் சாந்தி... சாந்தி...சாந்திஹி
தமிழில் இதன்பொருள்
எம்மைப் பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் (அறியாமையிலிருந்து மெய்மைக்கும் தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து நிலைப்பேற்றிற்கும் இட்டுச் செல்வாயாக.
சாம்பவி மகா முத்ரா
சாம்பவி மகா முத்ரா பயிற்சியின் முறைகள்
1.பதங்காசனா
பட்டாம்பூச்சி மாதிரி காலை மடக்கி வைத்துக்கொண்டு மேலே கீழே 2 நிமிடங்கள் செய்ய வேண்டும்
2. சிசுபாலாசனா
வலது காலை இடது கை நடுவில் வைத்துக்கொண்டு குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும்(2 நிமிடம்)
அதேபோன்று இடது காலை வலது கை நடுவில் தாங்கிக்கொண்டு, குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும், இதுவும் 2 நிமிடம்
3. நாடி விபாசனா
இதனை மூன்றுமுறை செய்துமுடிக்கவேண்டும். பூனை போன்று முதுகை நன்றாக வானவில்லை போல செய்யவேண்டும், பின்னர் முதுகுதண்டை கீழாக இறக்கவேண்டும் , மூச்சை தலை உள்வாங்கும்போது வெளியேற்றவேண்டும், தலையை மேல்நோக்கும்போது மூச்சை உள் வாங்கவேண்டும். குனிந்துகொண்டே வலது காலை நெற்றிதொட செய்து வெளிநீட்டவேண்டும், இதையே இடதுகாலிலும் தொடரவும்
4. சுகக்கிரியா
அர்த்தாசனத்தில் உட்கார்ந்து 7 நிமிடங்கள்
இதனை செய்யவேண்டும்
5. ஓம்
21 முறை “அ” “உ” “ம்” அதாவது ஓம் என்று கூறவேண்டும்
6. விபரீத சுவாசம்
தலையை சற்றே உயர தூக்கி மூச்சை இடது நாசி வழியாக உள்ளே இழுத்து வலது நாசிவழியாக வெளியே விடவேண்டும் .
மூன்று நிமிடங்கள் செய்து முடித்த பின் இடது நாசி வழியாக மூச்சை வெளியே விட்டு முடிக்க வேண்டும்.
7. பூட்டு (ஓஜஸ்)
மூச்சை நன்றாக உள்ளிழுத்து தலையை பின்னோக்கி சாய்த்து கழுத்தை உள்ளிழுத்து பின்னர் தலைகவிழ்த்து பூட்ட வேண்டும், வயிற்று பகுதியை இறுக்கவேண்டும், மலவாயை சுருக்கவேண்டும், இப்படியே ஆனந்தமாக எவ்வளவு நேரமிருக்கமுடியுமோ இருக்கவேண்டும்.
பின்னர் கழுத்தை நேர்வைத்து மூச்சை வெளியிடவேண்டும், கழுத்தை பின்னோக்கி சாய்த்து, உள்ளிழுத்து மறுபடியும் பூட்ட வேண்டும், இந்த நிலையில் எவ்வளவு நேரம் சுகமாக இருக்கமுடியுமோ இருக்கலாம். பின்னர் கழுத்தை நேராக்கி மூச்சை உள்ளிழுத்து , வயிற்றையும், மலவாயையும் தளர்வாக விடவும்
8. ஆனந்தமாக மூச்சை கவனிக்கவும்
மேல் கூறியவற்றை முடித்தபின் மூச்சை நன்றாக கவனிக்கவும் , ஓரே சீராக இருக்கும்!, இரண்டு , மூன்று நிமிடங்கள் இந்நிலையில் இருந்தவுடன் கைகளால் வணங்கி முகத்தை துடைத்துக்கொண்டு , மெதுவாக கண்களை திறக்கவும்(முதலில் தரையை பார்த்து பின்னர் பார்வையை மேல்நோக்கி கண்களை திறக்கவேண்டும்).
பின் குறிப்பு
இக்குறிப்பு முறையாக ஈசா பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டுமே
இதை வைத்து பயிற்சியை செய்யவேண்டாம்.
உங்கள் உடல் நலத்தை பாதுகாக்க விரும்பினால்
நீங்கள் உங்கள் ஊரிலேயே இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
http://ishafoundation.org ல் நிகழ்ச்சி தேதிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
ரூ.900 மட்டுமே நன்கொடையாக அளித்து நீங்கள் இந்த “சாம்பவி மகா முத்ரா” வை கற்றுக்கொள்ளலாம்
உங்கள் ஊரில் நடைபெறவில்லை என்றால் வருகின்ற ஜீன் மாதம்
நீங்கள் சத்குருவின் நாகர்கோவில் (29 ஜீன் முதல் 1 ஜுலை வரை)
அல்லது
பாண்டிச் சேரி (22 - 24 Jun 2012) பயிற்சி வகுப்பல் கலந்து கொள்ளலாம்
விபரங்களுக்கு
நாகர் கோவில் வகுப்பு பற்றிய விவரங்களுக்கு
Sadhguruvudan Isha Yoga
in Tamil
Date:
29 Jun - 1 Jul 2012
Location:
Desiha Vinayagar Nagar,
velladichivilai - kannankulam
Nagercoil, India
Details:

This program is conducted by Sadhguru.
For questions or offline registration details:
Contact 1:
Phone:
83000 66000
Email:
பாண்டிச்சேரி வகுப்பு பற்றிய விவரங்களுக்கு
Sadhguruvudan Isha Yoga
in Tamil
Location:
Tagore Art College ground,
Pondicherry, India
Details:

This program is conducted by Sadhguru.
For questions or offline registration details:
Contact 1:
Phone:
83000 16000
Email: