
சென்ற பாகத்தில் நடராஜர் சிலை சீர்படுத்த ஒரு ஸ்தபதியிடம் கொடுத்த தாக சொல்லி இருந்தேன் அந்த ஸ்தபதி அதே போல் இன்னோரு நடராஜர் சிலையை வடித்து சிலை சீர்படுத்தியாகிவிட்டது என்று கூறி போலி நடராஜரை சிவபுரம் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்து விட்டார்.
இது நடந்தது யாருக்கம் தெரியாது.
நடராஜர் எவ்வாறு கைமாறினார் என்பதை கீழே காணலாம்
ஸ்தபதி ரூ. 7,000 க்கு தஞ்சாவுரை சேர்ந்த 3 பேரிடம் விற்க
தஞ்சை 3வர் ரூ. 15,000 க்கு பம்பாயில் இருந்த பிரிட்டி பத்திரிக்கையாளரிடம் விற்க
பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் அதை ரூ. 25,000 க்கு கலைபொருள் விற்பணையாளரிடம் விற்க
விற்பணையாளர் அதை ரூ. 3,00,000 க்கு பென் கெல்லர் என்ற வெளி நாட்டவருக்கு விற்க
பென் ஹெல்லர் அதை ரூ. ஒரு கோடிக்கு ($900,000) நாட்டன் சைமன் என்ற பவுண்டேசனுக்கு விற்றார்.
இப்படியாக சிவபுர நடராஜர் வெளிநாடு சென்றார்.
டக்லஸ் பாரட் தனது ஆராய்சிக்கட்டுரையில் இதை வெளிவிடும் வரை இந்த செய்தி யாருக்கும் வெளியில் தெரியவில்லை.
திடுக்கிட்டனர். தொல்பொருள் இலாகாவினர்.
தாமதமாக விளித்துக் கொண்ட தமிழ்நாடு அரசு S.கிருஷ்ணராஜ் என்ற (Deputy Inspector General, CID) அதிகாரியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது.
இந்த அதிகாரியின் புலனாய்வின் படி நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் பதிவானது.
ஸ்காட்லாந்து போலிஸ் உதவியுடன் சிலை மீட்க உதவி கோரப்பட்டது.
இங்கிலாந்தை சேர்ந்த அண்ணா பொளல்டன் என்பவரிடம் சிலை இருந்தது.
இந்திய அரசு அமெரிக்க நாட்டன் சைமன் பௌண்டேசன் (Norton Simon Foundation) மேல் வழக்கு தொடுத்தது.
அமெரிக்க அரசின் உதவியை இந்திய வெளியுறவுத் துறை மூலம் தொடர்பு கொண்டு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு சைமனிடன் ஒப்பந்தம் செய்து
சிலை 1987 ல் இந்திய தொல் பொருள் துறையின் டைரக்டர் ஜெனரல் திரு.M.S. நாக ராஜ ராவ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்பொழுது சிவபுர நடராஜர் சென்னை மயிலாப்புர் கபாலிசுரர் ஆலயத்தில் அமர்ந்துள்ளார்.
விரைவில் நமக்கு தரிசனம் தர அவர் தான் மனது வைக்க வேண்டும்.